கனடாவின் முக்கிய நகரில் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள்: FIFA அறிவிப்பு
உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான FIFA உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் ரொறன்ரோவில் முன்னெடுக்கப்பட உள்ளது.
2026 உலகக் கிண்ணத்திற்கான 15 பகுதிகளில் ஒன்றாக ரொறன்ரோ நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக FIFA அறிவித்துள்ளது.
கனடாவில் ரொறன்ரோ மட்டுமின்றி வான்கூவரும் தெரிவாகியுள்ளது. 2026ல் உலகக் கிண்ணம் போட்டிகளுக்கு தெரிவான எஞ்சிய நகரங்கள் சியாட்டில், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், கன்சாஸ் சிட்டி, டல்லாஸ், அட்லாண்டா, ஹூஸ்டன், பாஸ்டன், பிலடெல்பியா, மியாமி, நியூயார்க்/நியூ ஜெர்சி மற்றும் மான்டேரி, குவாடலஜாரா மற்றும் மெக்ஸிகோ சிட்டி ஆகியவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, FIFA உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகளுக்காக ரொறன்ரோ நகரம் தெரிவாகியுள்ளதை நகர மேயர் வரவேற்றுள்ளார்.
48 அணிகள் பங்கேற்கும் FIFA உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியின் போது அமெரிக்கா 60 ஆட்டங்களை நடத்த வாய்ப்புள்ளது என்றும் கனடா மற்றும் மெக்ஸிகோ தலா 10 ஆட்டங்களை நடத்தும் என்றும் அதிகாரிகள் முன்பு கூறியுள்ளனர்.
ஆனால் குறித்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது. மேலும், ரொறன்ரோவில் உலகக் கிண்ணம் போட்டிகளை நடத்துவதால் பொதுமக்கள் வரிப்பணத்தில் $290 மில்லியன் செலவாகும் என்றே கூறப்படுகிறது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        