உலகக் கோப்பை இறுதி போட்டியில் அர்ஜென்டினா! ஓய்வு பெறுவது குறித்து மெஸ்ஸி முக்கிய தகவல்
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் விளையாடிய பின்னர் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அர்ஜென்டினா வெற்றி
நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் குரோஷியா - அர்ஜென்டினா மோதிய நிலையில் அர்ஜென்டினா அணி 3 - 0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி முதல் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு வந்ததையடுத்து இறுதியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
The Canadian Press
மகிழ்ச்சியடைகிறேன்
இதையடுத்து 18ஆம் திகதி நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா விளையாடவுள்ள நிலையில் அதன்பின்னர் மெஸ்ஸி ஓய்வுபெறவுள்ளார் என தெரியவந்துள்ளது.
உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அடுத்த தொடர் வருவதற்கு பல வருடங்கள் ஆகும், என்னால் அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். இப்படி முடித்து கொள்வதே சிறந்தது என அவர் கூறினார்.
35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.