அவர் கொல்லப்பட்டார்! கத்தார் உலகக் கோப்பையில் இறந்த தமிழ் வம்சாவளி பெண்ணின் கணவர்... சகோதரர் பகீர் தகவல்
கத்தார் உலகக் கோப்பை மைதானத்தில் தமிழ் வம்சாவளி பெண்ணின் கணவரான கிராண்ட் வஹி உயிரிழந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தான் நம்புவதாக அவரின் சகோதரர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சுருண்டு விழுந்து உயிரிழப்பு
அமெரிக்க பத்திரிக்கையாளரான கிராண்ட் வஹி (48) நேற்று முன் தினம் நடைபெற்ற அர்ஜென்டினா - நெதர்லாந்து போட்டியின் போது லுசைல் மைதானத்தில் தனது பணியை செய்து கொண்டு இருந்தார். அப்போது கிராண்ட் திடீரென கீழே சுருண்டு விழுந்தார், இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
அவர் இறப்புக்கு காரணம் மாரடைப்பு என தெரியவந்துள்ளது. கிராண்ட் மரண தகவல் அவரின் மனைவி செலின் கவுன்டரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செலின் பிரஞ்ச் தாய்க்கும், இந்திய தந்தைக்கும் பிறந்தவர் ஆவார், அதன்படி செலின் தந்தை தமிழர் ஆவார், அவரின் ஊர் தமிழகத்தின் ஈரோட்டில் உள்ள கிராமமாகும்.
கிராண்ட் முன்னர் LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வானவில் (rainbow) டி சர்ட் அணிந்து கத்தார் மைதானத்துக்குள் நுழைய முயன்ற போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
Absolutely bone chilling stuff
— JACK SETTLEMAN (@jacksettleman) December 10, 2022
Soccer journalist Grant Wahl who was kicked out of a stadium in QATAR for this shirt has reportedly collapsed and passed away during the Argentina game today
His brother says on Instagram that Grant was fully healthy & believes there’s foul play pic.twitter.com/t47C2XfuVl
ஓரினச்சேர்க்கை திருமணம் கத்தாரில் சட்ட விரோதம்
ஏனெனில் கத்தாரில் ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் ஓரினச்சேர்க்கை தொடர்பான அடையாளங்களை பொதுவெளியில் காட்டுவது சட்டவிரோதமாகும். இருப்பினும் ஃபிஃபா அதிகாரிகள் உலகக் கோப்பையில் வானவில் கொடியை காட்ட அனுமதிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.
இது தொடர்பில் பேசிய கிராண்டின் சகோதரர் எரிக், நான் அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிக்கிறேன். நான் தான் கிராண்டின் சகோதரன். அவர் உலகக் கோப்பைக்கு ரெயின்போ சட்டை அணிந்ததற்கு நான்தான் காரணம். ஏனெனில் நான் ஓரினச்சேர்க்கையாளர்.
என் சகோதரன் எந்த உடல்நல கோளாறும் இன்றி நலமுடன் இருந்தார். தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறினார். அவர் கொல்லப்பட்டார் என்று நான் நம்புகிறேன், இதில் உதவி செய்யுமாறு கெஞ்சி கேட்கிறேன் என தெரிவித்துள்ளார்.
iheart