துர்நாற்றம் வீசுகிறது! குளியுங்கள்.. கத்தார் உலகக் கோப்பையில் மக்களை அவமதித்த கால்பந்து வீரர் மனைவி
கத்தார் உலக கோப்பையில் பங்கேற்ற நட்சத்திர வீரர் Jorge Sanchezன் மனைவி Linda Villanueva அந்நாட்டு மக்கள் தொடர்பில் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
மெக்சிகோ வீரர் மனைவி
மெக்சிகோ கால்பந்து அணியின் வீரர் Jorge Sanchez. இவர் மனைவி Linda Villanueva. மெக்சிகோ அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், அந்நாடு செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.
இதற்கு காரணம் Linda தான். ஏனெனில் அவர் கத்தார் நாட்டு மக்கள் மீது துர்நாற்றம் வீசுகிறது எனவும் அவர்கள் வாசனை திரவியம் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மோசமான துர்நாற்றம்
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், இவர்கள் குளிப்பதற்கும், வாசனை திரவியம் போடுவதற்கு என்ன செலவாக போகிறது! மோசமான துர்நாற்றம் வீசுகிறது என தெரிவித்துள்ளார்.
Linda-வின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.