கத்தாரில் இருந்து வேதனையுடன் வெளியேறிய ரொனால்டோ மற்றும் மனைவி! உணர்ச்சிபூர்வமான வீடியோ
கத்தார் உலகக் கோப்பையில் போர்ச்சுகல் தோற்ற நிலையில் ரொனால்டோ, அவர் மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் தனியார் ஜெட் விமானத்தில் கத்தாரை விட்டு வெளியேறிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
போர்ச்சுகல்
டிசம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் - மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் போர்ச்சுகல் அணி கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்காமல் தோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.
இந்த தோல்வி காரணமாக போர்சுகலைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவும் தகர்ந்தது. காலிறுதியில் தோற்ற உடன் கண்ணீர்விட்டு அழுது மைதானத்தில் இருந்து வெளியேறினார் ரொனால்டோ.
வீடியோ காட்சி
இந்த நிலையில் 2022 உலகக் கோப்பையில் இருந்து போர்ச்சுகல் வெளியேறிய பிறகு, கத்தாரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கிளம்பிய உணர்ச்சிபூர்வமான வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் ரொனால்டோ மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் முகம் சோகத்தில் வாடியிருந்ததை காண முடிந்தது.
Cristiano Ronaldo and his family have just left Qatar on his private jet. We won't see him at the FIFA World Cup ever again. The end of a long-cherished dream forever! ? pic.twitter.com/QcQ3fhRexJ
— Frank Khalid (@FrankKhalidUK) December 12, 2022