கத்தார் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் இவைதான்! உறுதியான தகவல்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் தொடர்பில் உறுதியான தகவல்கள் தெரியவந்துள்ளது.
அரையிறுதிப் போட்டிக்கு 4 அணிகள் தகுதி
FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான இடத்தை அடைந்துள்ளது. இதில் தற்போது காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதன்படி பிரான்ஸ், மொரோக்கோ, குரோஷியா, அர்ஜென்டினா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
The final four teams are set! ????????#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 10, 2022
இறுதிப்போட்டி
இந்த நிலையில் அரையிறுதியில் அர்ஜென்டினா - குரோசியா ஆகிய அணிகளும் பிரான்ஸ் - மொரோக்கோ ஆகிய அணிகளும் மோத உள்ளன.
இந்த போட்டிகள் வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் 18ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
அதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.