நவராத்திரி ஐந்தாம் நாள்! இப்படி விரதம் இருப்பதனால் கோடி நன்மைகள் பெருகுமாம்
இன்று நவராத்திரி ஐந்தாம் நாளான ஆகும். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் மகேஷ்வரி எழுந்தருளியிருப்பவள். இன்று அன்னையை வணங்குவதால், நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
சும்பன் எனும் அசுரனின் தூதுவனான சுக்ரீவன் வந்து சந்தித்து பேசுவான். அவனது தூது பேச்சை கேட்டப்படி அன்னை சிம்மாசனத்தில் வீற்றிருப்பாள். அந்த சமயத்தில் அவளது தோற்றம் புன்னகை ததும்ப காட்சி அளிப்பதாக இருக்கும்.
இத்தகையை வடிவத்தில் அன்னையை அலங்கரித்து வழிபட வேண்டும்.
இந்த அலங்காரத்தில் அன்னையை மோகினி என்பார்கள். அந்தவகையில் இன்று எப்படி வழிப்பட வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
எப்படி வழிபட வேண்டும்?
- இன்று 6-வயது குழந்தையை அம்மனாக பாவித்து வழிபட வேண்டும். அந்த சிறுமிக்கு இலவங்கப்பட்டையும் சந்தனமும் கொடுக்கலாம். சிலர் தாமிரம் கொடுப்பதுண்டு.
- இன்றைய தினம் அம்பாளை பவளமல்லி மற்றும் சாம்பல் நிற இலைகள் கொண்டு பூஜிப்பது அதிக பலன்களை தரும். அது போல அம்பாளை மாதுளம் பழம் படைத்து வழிபடலாம். நைவேத்திய வகைகளில் தயிர் சாதம் படைக்க வேண்டும்.
- இன்றைய வழிபாடு அனைத்து வகை செல்வங்களையும் கொண்டு வந்து நமக்கு தரும். மேலும் நீங்கள் எந்த செல்வம் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அல்லது ஆசைப்படுகிறீர்களோ அவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.
குறிப்பு
வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : பஞ்சமி
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
ராகம் : பஞ்சமாவரணை கீர்த்த னைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.