இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த ஒரே ஒரு பழம் போதும்: இப்படி எடுத்துக்கோங்க
அத்திபழம் பசியை கட்டுப்படுத்தவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் சிறந்த ஒன்று.
அத்தி பழத்தில் தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இதனை பழமாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது உலர் பழங்களாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரையின் அளவை குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழத்தை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
இரத்த சர்க்கரைக்கு அத்திப்பழம்
உணவுக்குப் பிறகு உடல் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் அத்திபழம் பெரும் பங்கு வகிக்கிறது.
இதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
அத்தி பழத்தில் மிதமான Glycemic Index (GI) 61 உள்ளது. இது மற்ற உயர் Glycemic Index (GI) உணவுகளை விட மெதுவாக இரத்தத்தில் குளுக்கோஸை வெளியிடுகிறது.
அத்திப்பழத்தில் உள்ள இரத்தச் சர்க்கரை அமிலங்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
- 3 உலர் அத்தி பழங்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிடுங்கள்.
- ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெற அதிகாலையில், எழுந்தவுடன் உட்கொண்டால் மிகவும் நல்லது.
- இது மற்ற புரதங்களுடன் பகலில் சாப்பிடலாம்.
- இரவில் படுக்கைக்கு முன் சூடான பாலுடன் சாப்பிடுவது நல்லது.
மேலும் சில ஆரோக்கிய நன்மைகள்
- இரத்தத்தில் LDL அளவைக் குறைத்தல்
- Hepatoprotective (கல்லீரலைச் சுத்தப்படுத்துதல்)
- நீரிழிவு எதிர்ப்பு (இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துதல்)
- Antipyretic (காய்ச்சலைக் குறைத்தல்)
- Antispasmodic (தசை பிடிப்புகளைக் குறைக்க உதவுதல்)
- உடலின் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்தும்.
- இரத்த சோகையை குணப்படுத்தும்.
- இரத்த அழுத்தம் சீராக்கும்.
- மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
- உடல் எடையை குறைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |