மேகன் தரையில் உட்கார்ந்து அழுததாக ஹரி கூறிய விடயம் உண்மையில்லை? : மேகனுடைய தையல் கலைஞரே கூறியுள்ள தகவல்
பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் திருமணத்துக்காக, பூக்கூடை சுமந்து செல்லும் பிள்ளைகளின் உடைகள் தொளதொளவென்று இருந்ததாகவும், அது தொடர்பில் இளவரசி கேட்டுக்கும் மேகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஹரி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த விடயம்
இளவரசர் ஹரி தனது புத்தகமாகிய Spareஇல் இதைக் குறித்துக் குறிப்பிடும்போது, தான் மேகனைச் சந்திக்கச் செல்லும்போது, மேகன் தரையில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்ததாகவும், அதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களோ இளவரசி கேட்டை மேகன் அழவைத்ததாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தன.
மேகன் அறிமுகம் செய்த தையல் கலைஞர் தெரிவித்துள்ள தகவல்
பிள்ளைகளின் உடைகள் தொளதொளவென இருப்பதாக இளவரசி கேட் கூறியபோது, அஜய் இங்கேதான் இருக்கிறார். அவரிடம் கொடுத்து உடைகளை சரி செய்துகொள்ளலாம் என மேகன் கூறியிருந்தார்.
மேகனால் அறிமுகம் செய்யப்பட்ட அந்த அஜய் (Ajay Mirpuri), லண்டனில் மிகப்பெரிய தையல் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் பிரபல தையல் கலைஞர் ஆவார்.
தற்போது, இளவரசி கேட்டுக்கும் மேகனுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படும் வாக்குவாதம் குறித்து அஜய் மௌனம் கலைத்துள்ளார்.
இளவரசி கேட்டுக்கும் மேகனுக்கும் இடையில் நடந்ததாகவும், மேகன் தரையில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்ததாகவும் கூறப்படும் நிலையில், அப்படி எதையும் நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் அஜய்.
இதற்கிடையில், ஹரி மேகன் திருமணத்துக்காக பூக்கூடை சுமந்து செல்லும் பிள்ளைகளின் உடைகளை வடிவமைத்தவர் மிகவும் பிரபலமான ஒரு உடை வடிவமைப்பாளர் ஆவார். அவர் வடிவமைத்த உடைகளே பெரும் பிரச்சினையை ஏற்படுத்த, அஜயும், அவரது தையல் கலைஞர்கள் மூன்று பேருமாக சேர்ந்து மூன்று நாட்கள் உழைந்து அந்த உடைகளை சரி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.