எதிர்பார்த்தபடியே நடந்தது... பிரான்சில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல்
பிரான்சில், இஸ்ரேல் பிரான்ஸ் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்பார்த்தபடியே நடந்தது...
நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில், அந்நகர கால்பந்து அணிக்கும்,இஸ்ரேல் அணி ஒன்றிற்கும் இடையில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது, இஸ்ரேல் கால்பந்து அணி ஆதரவாளர்களுக்கும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
அதைத் தொடர்ந்து, நேற்று இஸ்ரேல் அணிக்கும் பிரான்ஸ் அணிக்கும் இடையில் பிரான்சில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
ஆனால், பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், அந்த போட்டியைத் தவிர்க்குமாறு இஸ்ரேல் மக்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆக, 80,000 பேர் அமரத்தக்க விளையாட்டு மைதானத்தில், வெறும் 20,000 இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
இஸ்ரேல் ஆதரவாளர்கள் குறைவாகவே இருந்த நிலையிலும், விளையாட்டுப் போட்டியின் முதல் பாதியின்போது திடீரென ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இஸ்ரேல் கொடிகளை ஏந்திய ஒரு கூட்டமும், பிரான்ஸ் கொடிகளை ஏந்திய ஒரு கூட்டமும் மோதிக்கொள்ள, எந்த அணி ரசிகர்கள் என தெரியாத ஒரு கூட்டம் மக்கள், மோதல் நடக்கும் இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டவர்களை பிரிக்க, போட்டியின் இரண்டாவது பாதி அமைதியாக சென்றுள்ளது.
விடயம் என்னவென்றால், போட்டியில் இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |