காதலியுடன் சண்டை., பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருத்துவர்
நடுவழியில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில், காதலி பேசாமறுத்ததால், கோபத்தின் உச்சிக்கு சென்ற காதலன் தனது ரூ.70 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவரின் காதல்
தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் (28), காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று கடந்த ஆண்டு படிப்பை நிறைவு செய்தார்.
அவர் படிக்கும்போது அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி காவ்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
Timesnow
இந்தநிலையில், காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் தனது காதலியுடன் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
பென்ஸ் காரை கொளுத்திய காதலன்
இதனால் ஆத்திரமடைந்த கவின் தனக்கு சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்பிலான பென்ஸ் சொகுசு காரினை பெட்ரோல் ஊற்றி தீவித்துள்ளார்.
சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்ட குலைக்கரைப் பகுதி மக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலியுடனான சண்டையால் கோபத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான காரை எரித்து நாசமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.