ட்ரம்ப் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல்., அத்துமீறி நுழைந்த விமானத்தை வெளியேற்றிய போர் விமானங்கள்
டொனால்ட் ட்ரம்பின் கோல்ஃப் கிளப் பகுதியில் அடையாளம் தெரியாத விமானமொன்று அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூ ஜெர்சி மாநிலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தங்கியிருந்த Trump National Golf Club - Bedminster பகுதியில் விமானம் ஒன்று No-Fly-Zone வலயத்தை மீறி புகுந்ததால், அதனை வெளியேற்ற அமெரிக்க போர்விமானங்கள் அவசரமாக பறக்கவிடப்பட்டன.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:50 மணிக்கு நடந்தது.
NORAD (North American Aerospace Defense Command) வெளியிட்ட அறிக்கையில், ஒரு பொதுமக்கள் விமானம் தற்காலிகமாக விதிக்கப்பட்ட ‘நோ-ஃப்ளை’ வலயத்திற்குள் நுழைந்தது எனத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து போர்விமானங்கள் எச்சரிக்கைக் குண்டுகளை (flares) விடுத்து அந்த விமானத்தை விலகச் செய்து, பாதுகாப்பாக வெளியே அனுப்பின.
இந்த ஒளிக் குண்டுகள் தரையில் இருந்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம் எனினும், அவை விரைவில் அணைந்துவிடும் மற்றும் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என NORAD தெரிவித்துள்ளது.
அதே நாளில் இது இரண்டாவது தவறான நுழைவு, மேலும் வார இறுதியில் மொத்தம் 5 விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளன.
இச்சம்பவம் நிகழ்ந்த போது ட்ரம்ப் கிளப்பில் தங்கியிருந்தார். இது போன்ற அனுமதியில்லா விமான நுழைவுகள் அவரது இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஒரே நாளில் 5 விமானங்கள் தடை செய்யப்பட்ட விமானப்பாதையை மீறி பறந்துள்ளன.
FAA விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது NORAD-இன் கண்டிப்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump golf club airspace breach, Fighter jets intercept plane, NORAD flares Trump airspace, Trump Bedminster no-fly zone, Unauthorized aircraft near Trump, FAA restricted airspace violation, Plane enters Trump no-fly zone, US air defense scrambles jets, NORAD alert near Trump, Trump national golf club security