நடுவானில் விமானத்தை வழிமறித்த போர் விமானங்கள்... சூழ்ந்த பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை பாதுகாப்பாக வேறொரு விமான நிலையத்துக்குக் கொண்டு சென்றதால் விமானப் பயணிகள் குழப்பமடைந்தார்கள்.
பிரித்தானிய விமானத்தை தரையிறக்கச் செய்த போர் விமானங்கள்
கென்யாவின் தலைநகர் நைரோபியிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த கென்யன் ஏர்வேஸ் விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு வழிநடத்தியுள்ளன.
GABBY COLENSO/BBC
அந்த விமானம் பிரான்ஸ் வான்வெளியில் பறக்கும்போது, பிரித்தானிய அதிகாரிகளுக்குக் கிடைத்த எச்சரிக்கையை அடுத்து, உடனடியாக பிரித்தானிய போர் விமானங்கள் அந்த விமானத்தை வழிமறித்துள்ளதாக தெரிகிறது.
விமானம் தரையிறங்கியதும், ஏராளமான ஆயுதம் ஏந்திய பொலிசார் விமானத்தை சூழந்துகொள்ள, பயணிகள் குழப்பமடைந்துள்ளார்கள்.
UGC
என்ன பிரச்சினை?
எதனால் அந்த விமானம் வழிமறிக்கப்பட்டு ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதனால் மற்ற விமானங்களுக்கும், அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
GABBY COLENSO/BBC
இதற்கிடையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு போன்ற அபாயம் இல்லை என்றும், விமானத்திலிருந்த சில பயணிகள் தொடர்பில் எச்சரிக்கை கிடைத்ததாலேயே பொலிசார் விமானத்தை தரையிறக்கி சோதனை நடத்தியதாகவும் கென்யா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |