மதுரை போராட்டம்.., குஷ்பு உள்ளிட்ட 314 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார்
மதுரையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்கு குஷ்பு உள்ளிட்ட 314 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து, பாஜக சார்பில் நேற்று தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் பேரணி நடத்தினர்.
அப்போது, பேரணியில் கலந்துகொள்ள பாஜக பிரமுகர் குஷ்பு வந்திருந்தார். பின்னர், தடையை மீறி தொடர்ந்து பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட பாஜக மகளிர் அணியினர் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆயிரம் வீட்டு யாதவ ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் ஆடுகள் அடைக்கப்பட்ட பகுதியின் அருகே அடைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரையும் பொலிஸார் விடுவித்தனர்.
இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு மற்றும் உமாரதி உள்பட 314 பேர் மீது திலகர் திடல் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்துதல், பொலிஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |