இன்னொரு இளம் வயது பிரபல நடிகை ஆபத்தான கட்டத்தில்... தந்தை வெளியிட்ட தகவல்
அமெரிக்க ஆபாசப்பட நடிகை Emily Willis திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த மாத இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீள முடியாத கோமாவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத்தினர் எச்சரிக்கை
மிக மோசமான நிலையை எதிர்கொள்ள ரசிகர்கள் தயாராக வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெறும் 25 வயதேயான Emily Willis தற்போது இயந்திர உதவியால் மூச்சுவிடுகிறார் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
நடிகை எமிலி வில்லிஸ் மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மீண்டும் போதை மருந்து எடுத்துக்கொண்டதாலையே, மாரடைப்பு ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்டது.
ஆனால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் அது உண்மை அல்ல என்று தெரியவந்ததாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார். 8 நாட்கள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த எமிலி, போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுபட்டு, மீண்டுவரவே ஆசைப்பட்டுள்ளார்.
சாதிக்க வேண்டும்
மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே எமிலி ஆபாசப்படங்களில் நடிப்பதை கைவிட்டுள்ளார். மேலும் திரைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்றும் அவர் முயன்று வந்துள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 3 மாதங்கலில் 4 ஆபாசப்பட நடிகைகள் திடீரென்று மரணமடைந்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |