இறுதிவரை நிறைவேறாமல் போன நடிகர் மாரிமுத்துவின் ஆசை
நடிகர் அஜித்துடன் இணைந்து அடுத்து படம் நடிக்கவுள்ளதாக தெரிவித்த மறைந்த நடிகர் மாரிமுத்துவின் ஆசை நிறைவேறாமல் போனது.
நடிகர் மாரிமுத்து மரணம்
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை 6 மணி முதல் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அறையில் புழுக்கம் இருந்ததாக கூறி வெளியில் வந்துள்ளார்.
பின்னர், அசௌகரியம் ஏற்பட்டதால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு, அவர் சிகிச்சையில் இருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம், திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தொலைகாட்சி தொடர்களில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான மாரிமுத்து பேசிய 'ஏய் இந்தம்மா' என்ற வசனம் சமீபத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
மாரிமுத்துவின் நிறைவேறாமல் போன ஆசை
இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்து அஜித் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேட்டியில் அவர், "நான் நடிகரான பிறகு நடிகர் அஜித்துடன் இணைந்து இதுவரை படம் பண்ணவில்லை. அடுத்து, அவருடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன்" என்று பேசியிருந்தார்.
மேலும் அவர், "என் மகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது அஜித் தான். அதையடுத்து, அடுத்த 8 ஆண்டுகளுக்கும் அவர் தான் பள்ளி செலவை பார்த்துக் கொண்டார். அவருடன் மீண்டும் அதிகமாக பேச வேண்டும்" என்றார்.
வாலி, ஆசை போன்ற படங்களில் அஜித்துடன் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ள மாரிமுத்துவின் ஆசை நிறைவேறாமல் போயுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |