ராஜ குடும்பத்துடன் இணைய ஹரி மேகன் தம்பதிக்கு தடையாக இருந்த எதிரி பணி ஓய்வு
பிரித்தானிய இளவரசரான ஹரி, ராஜ குடும்பத்துடன் இணைய தடையாக இருந்த ஒருவர் ஓய்வுபெற இருக்கிறார்.
ஹரி மேகன் தம்பதிக்கு தடையாக இருந்த எதிரி பணி ஓய்வு
ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறிய ஹரி மேகன் தம்பதியரை மீண்டும் குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளக்கூடாது என மன்னர் சார்லசுக்கு ஆலோசனை கூறிவந்த நபர், மன்னரின் தனிச்செயலரான Clive Alderton (57) என்பவர்.
ஆனால், அவர் ஓய்வு பெற இருப்பதாக ராஜ குடும்ப நிபுணரான Tine Brown என்பவர் தெரிவித்துள்ளார்.
ஹரி, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தன் தந்தையான மன்னர் சார்லசை சந்தித்து அவருடன் சமாதானம் செய்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், மன்னரை அவர் சந்திக்கவிடாமல் தடுத்ததன் பின்னணியில் Clive Alderton இருப்பதாக கூறப்படுகிறது.
ஆக, தன்னுடைய எதிரி என ஹரி கருதிய Clive Alderton தற்போது ஓய்வு பெற இருப்பதால், ஹரி தன் தந்தையை சந்திப்பதற்கான தடை நீங்கியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த Clive Aldertonஐ, ஹரி தனது சுயசரிதைப் புத்தகமான ஸ்பேரில், மிகக்கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |