பிரான்ஸ் பொருளாதார மந்தநிலைக்கு செல்கிறதா? நிதி அமைச்சர் விளக்கம்
எங்களது வளர்ச்சி மதிப்பீட்டை 2.5 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக மாற்றியுள்ளோம் - நிதி அமைச்சர் புருனோ லி மைர்
பொருளாதார வளர்ச்சி கண்ணோட்டத்தை 1.4 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் ஆக குறைத்தது பிரான்ஸ் அரசு
பிரான்ஸ் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளவில்லை என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசாங்கம் 2023ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி கண்ணோட்டத்தை 1.4 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் ஆக குறைத்தது.
அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ லி மைர் பொருளாதார மந்தநிலை குறித்து கூறுகையில், 'பிரான்ஸ் மந்தநிலைக்கு செல்லவில்லை. பிரான்ஸ் 2022ஆம் ஆண்டை சிறப்பாக கொண்டுள்ளது. எங்களது வளர்ச்சி மதிப்பீட்டை 2.5 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக மாற்றியுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரெஞ்சு குடும்பங்கள் அதிகரித்த செலவுகளில் சிறிய பகுதியை உறிஞ்சுவது சட்டப்பூர்வமானது என வலியுறுத்தினார்.
PC: REUTERS/Sarah Meyssonnier
மின் விலையில் தற்போதைய வரம்புகள் மற்றும் எரிவாயு விலை முடக்கம் ஆகியவை இணைந்து 16.5 பில்லியன் யூரோக்கள் இந்த குளிர்காலத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.