இளைஞர்களுக்கு உதவுவதற்காக சுவிஸ் நகரமொன்று அறிமுகம் செய்துள்ள திட்டம்
இளைஞர்களுக்கு உதவுவதற்காக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அது என்ன திட்டம்?
25 வயதுக்குக் கீழுள்ள இளைஞர்களுக்கு உதவும் நோக்கில், ஜெனீவா நகரம், ஆண்டொன்றிற்கு ஆளுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த நிதி உதவி ஜெனீவாவில் வாழும், வேலை தேடும் இளைஞர்களுக்காக மட்டுமே.
இளைஞர்கள் அந்த பணத்தை வேலைக்கான பயிற்சி பெறவும், ஓட்டுநர் உரிமம் பெறவும், வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்வதற்காக நல்ல உடைகள் வாங்கவும், கணினி முதலான உபகரணங்கள் வாங்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த நிதி உதவியைப் பெற விரும்புவோர், ஏற்கனவே வேறொரு வேலைக்கான பயிற்சி பெற்றுக்கொண்டு இருப்பவராக இருக்கக்கூடாது.
அத்துடன், அவர் உயர் நிலை பட்டயப்படிப்பு முடித்திருப்பதுடன், தனது நிதி நிலை குறித்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |