நிலையை மாற்றவில்லை என்றால் இதுதான் கதி! பிரபல ஐரோப்பிய நாட்டிற்கு பிரான்ஸ் எச்சரிக்கை
ஐரோப்பிய நாடான போலந்து மீது நிதி உட்பட பொருளாதார தடைகளை பிரான்ஸ் விதிக்கலாம் என்று ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரான்ஸ் வெளியுறவு செயலாளர் Clement Beaune எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான போலந்தில் உள்ள உயர் நீதிமன்றம் ஒன்று, ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் முக்கிய பகுதிகளை நிராகரித்து தீர்ப்பு அளித்து, இதை தொடர்ந்து போலந்து-ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான மோதல் போக்கு தொடங்கியது.
ஒரு ஐரோப்பிய உறுப்பு நாடாக இருந்துக்கொண்டு, அதன் சட்டத்தையே போலந்து நிராகரித்ததற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், போலந்து பிரச்சினை குறித்து பேசிய ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரான்ஸ் வெளியுறவு செயலாளர் Clement Beaune, இந்த பிரச்சினையில் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை தொடர்வது அவசியம்.
ஆனால், பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், நிதி உட்பட பல தடைகள் விதிக்கப்படலாம்.
ஐரோப்பா இறையாண்மை கொண்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர யாரும் யாருக்கும் எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. உதாரணத்திற்கு பிரெக்சிட் போல் நீங்கள் தாராளமாக விலகலாம்.
போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக விரும்புகிறது என நான் நினைக்கவில்லை.
ஆனால், பொது விதிகளை பின்பற்றாமல் போலந்து ரிஸ்க் எடுக்கிறது. நிலைமையை விளக்க போலந்து பிரதமருக்கு நாங்கள் வாய்ப்பு அளிப்போம்.
செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அவர் விளக்கமளித்தார். துரதிஷ்டவசமாக அது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை, மாறாக, தூண்டும் வகையில் இருந்தது.
வரவிருக்கும் மாதங்களில் போலந்து தனது நிலையை மாற்றவில்லை என்றால், எதிர்காலத்தில், தடைகளை விதிப்பதற்கான நடைமுறை தொடங்கப்படலாம் என்று Clement Beaune எச்சரித்துள்ளார்.