தங்கம் விலை இன்னும் குறையுமா? நிதி நிபுணர் REGI THOMAS விளக்கம்
finanical expert regi thomas about gold price drop: தங்கம் விலை இன்னும் குறையுமா? பெட்ரோல் டீசல் விலை உயருமா? என நிதி நிபுணர் REGI THOMAS விரிவாக பேசியுள்ளார்.
தங்கம் விலை இன்னும் குறையுமா?
கடந்த சில நாட்களாக தங்க விலை படிப்படியாக குறைந்தே உள்ளது. இதன் காரணமாக, தங்கம் வாங்க விரும்புபவர்கள் இன்னும் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு குறைவு, இந்த நிலையிலே நீடிக்கும் என தெரிவித்துள்ளார் நிதி நிபுணர் REGI THOMAS.
மேலும், முதலீட்டாளர்கள் நேரடியாக தங்க ETFல் முதலீடு செய்ய கட்டுப்பாடு எதுவும் விதிக்கவில்லை. Fund Of Fundல் முதலீடு செய்யவே கட்டுப்பாடு விதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்ன?, பெட்ரோல் டீசல் விலை உயருமா? ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் என்னும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்குமா, ஜியோ பங்குகள் வாங்கலாமா?, தமிழ்நாட்டில் பணவீக்கத்திற்கு காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நிதி நிபுணர் REGI THOMAS விளக்கியுள்ளார்.