இலங்கை மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வர வைப்போம்: அவுஸ்திரேலிய கேப்டன்
கிரிக்கெட் போட்டியின் மூலம் இலங்கை மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருவோம் என ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என நீண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக அவுஸ்திரலிய அணி இலங்கை சென்றடைந்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி 7ஆம் திகதி நடக்கிறது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் துயரத்தில் உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய கேப்டன், இலங்கை மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருவோம் என கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், 'நாங்கள் இலங்கை மண்ணில் கிரிக்கெட் விளையாட உள்ளோம். இதன் மூலம் அந்த நாட்டு மக்கள் முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம். 2016ஆம் ஆண்டுக்கு பிறகு நாங்கள் இங்கு வருவது இதுவே முதல் முறை. இது நீண்ட இடைவெளி.
Photo Credit: Getty Images
இலங்கை என்பது கிரிக்கெட் விளையாடுவதற்கு சிறப்பு வாய்ந்த ஒரு இடம். இங்கு அளிக்கப்படும் விருந்தோம்பலும், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான இந்நாட்டு மக்களின் ஆர்வமும், நட்பும் நம்ப முடியாத அளவில் இருக்கும். இலங்கை அணியின் டாப் வரிசையை எடுத்துக் கொண்டால் குசல் மென்டிஸ் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர்.
அவருக்குரிய நாளாக அமைந்து விட்டால் பந்துவீச்சை அடித்து நொறுக்கி விடுவார். அதே போல் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா கடந்த சில ஆண்டுகளாக 20 ஓவர் கிரிக்கெட்டில் வியப்பூட்டும் வகையில் விளையாடி வருகிறார். நாங்கள் இலங்கைக்கு எதிராக ஒரு சில நெருக்கமான தொடர்களில் விளையாடி உள்ளோம். இலங்கை மிகவும் அபாயகரமான ஒரு அணி' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: AFP
Photo Credit: Reuters