ஐபோனை போலியா என கண்டுபிடிப்பது எப்படி? இதோ வழி
ஐபோன்களுக்கான விற்பனையில் போலி ஐபோன்களும் கலந்துள்ளதாகவும், அதன் விற்பனை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் நாம் வைத்திருக்கும் ஐபோன் அசலா, போலியா என சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது.
போலி ஐபோனை எப்படி கண்டுபிடிப்பது? Packaging, IMEI எண், தயாரிப்பு தரம் மற்றும் Software போன்ற அம்சங்கள் மூலம் போலி ஐபோனையை கண்டறியலாம்.
குறிப்பாக ஆப்பிள் ஐபோன்களுக்கான தனித்துவமான அடையாளங்களைக் கொண்டு போலி ஐபோன்களைக் கண்டுபிடிக்கலாம்.
Packaging:
முதலில் உங்கள் ஐபோனின் Packaging மற்றும் பாகங்களை ஆராய வேண்டும். ஏனெனில், ஐபோன் Pack செய்யப்படும் பெட்டிகள் உறுதியானவை.
உயர்தரமான படங்கள் மற்றும் துல்லியமான வடிவமைப்பைக் கொண்டவை. பின்னர் பெட்டியின் உள்ளே இருக்கும் இதர பாகங்கள் ஆப்பிள் தயாரிப்புகளின் தரத்துடன் பொருத்த வேண்டும்.
தரமற்ற அச்சு, தளர்வான Packaging அல்லது பொருந்தாத பாகங்கள் இருந்தால் போலி ஐபோனாக இருக்கலாம்.
வரிசை எண் மற்றும் IMEI எண்:
மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே ஐபோனிலும் தனித்துவமான வரிசை எண் மற்றும் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (IMEI) உள்ளது.
சீரியல் எண்ணை கண்டறிய Settings சென்று General > About என்ற வழியில் செல்லவும். பின்னர் ஆப்பிளின் Check Coverage பக்கத்திற்கு சென்று சீரியல் எண் டைப் செய்து சமர்ப்பிக்கவும்.
இவ்வாறு செய்யும்போது உங்கள் ஐபோன் உண்மையானதாக இருந்தால், ஐபோன் மொடல், Warranty status மற்றும் பிற தொடர்புடைய தகவல்களைக் காண்பிக்கும்.
IMEI எண்ணை சரிபார்க்க, உங்கள் ஐபோனில் *#06# என டைப் செய்யவும், திரையில் தோன்றும் எண்ணை பாக்சில் உள்ள எண்ணுடன் சாப்பிடவும். பின், சிம் ட்ரேயில் உள்ள IMEI எண்ணுடனும் ஒப்பிடவும். அசல் ஐபோன் ஆக இருந்தால் எல்லா எண்களும் பொருத்த வேண்டும்.
தயாரிப்பு தரம்:
நீங்கள் வாங்கியது அசல் ஐபோன் என்றால், அது தளர்வான பாகங்களைக் கொண்டிருக்காது. திடமான கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்.
பின்புறத்தில் உள்ள ஆப்பிள் லோகோ துல்லியமாக இருக்கும். இவை மட்டுமல்லாது திரையின் அளவு, காட்சி தரம், எடை மற்றும் தடிமன் ஆகியவை அதிகாரப்பூர்வ மொடலில் உள்ள விவரக்குறிப்புகளுடன் பொருத்த வேண்டும்.
பின் Sim ட்ரேயை அகற்றி ஸ்லாட்டை ஆய்வு செய்யவும். பெரும்பாலும் போலி ஐபோன்களில் தவறான Logoக்கள் அல்லது தளர்வான பொத்தான்கள் போன்ற குறைபாடுகள் இருக்கும்.
இதில் கூர்ந்து கவனித்தால் இந்தக் குறைகளை எளிதாகக் கண்டறியலாம். துல்லியமாகத் தெரிந்துகொள்ள லென்ஸ் பயன்படுத்தியும் சோதனையிடலாம்.
மென்பொருள் அம்சங்கள்:
அசல் ஐபோன்கள் ஆப்பிளின் iOSயில் இயங்குகின்றன. உங்கள் மொபைல் போன் iOSயின் சமீபத்திய பதிப்பில் இயங்குகிறதா என்பதை Settings சென்று General > Software Update என்ற வழியில் சென்று சரிபார்க்கலாம்.
அதேபோல், ஐபோன் Power பொத்தானை பிடித்து அல்லது "ஹே சிரி" என்று கூறி Siri Assistantஐ பயன்படுத்த முயற்சி செய்யவும்.
Siri செயல்படவில்லை என்றால் உங்கள் ஐபோன் போலியானதாக இருக்கலாம்.
ஆப்பிள் சேவை மையம்:
ஒருவேளை உங்கள் ஐபோன் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.
ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை நிபுணர்கள் உங்கள் ஐபோனை சரிபார்க்க உதவி செய்வார்கள். இந்த குறிப்புகளைக் கொண்டு நீங்கள் உங்கள் ஐபோனை அசலா அல்லது போலியா என கண்டறியலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |