இனி உங்கள் Samsung மொபைல் தொலைந்துவிட்டால் கவலை வேண்டாம்: ஈசியா கண்டுபிடிக்க இந்த அம்சம் போதும்
Smartphone நம் வாழ்வின், அலுவலக வேலை, பொழுது போக்கு, பண பரிவர்த்தனைகள், மற்றவர்களுடன் பேச என பல காரணங்களுக்கு முக்கிய அங்கமாகிவிட்டது.
அதேநேரம் நாம் பயன்படுத்தும் Smartphone-களில் நம்முடைய Bank details, personal details, contacts, messages என பல விவரங்கள் இருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் மொபைலை எங்கேயாவது தவறவிட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில் உங்கள் Samsung மொபைல் தொலைந்தால் அதை கண்டுபிடிக்க Samsung நிறுவனம் உதவுகிறது. எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
Find My Mobile locator
உங்களது Samsung மொபைல் தொலைந்து விட்டால் அல்லது எங்கேயாவது தவறவிட்டிருந்தால் மொபைல் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய Find My Mobile locator அம்சம் உதவுகிறது.
இந்த Samsung Smartphone Tracker அம்சமானது Google மற்றும் Apple வழங்கும் பிற Find My Service போலவே செயல்படுகிறது.
Samsung Smartphones மட்டுமல்லாமல் Samsung நிறுவனத்தின் பிற தயாரிப்புகளான Smart watches, tablets போன்ற சாம்சங் Device-களின் இருப்பிடத்தை கண்டறிய உதவும்.
இந்த அம்சமானது யூசர்கள் தங்கள் Device தொலைவில் இருந்தாலும் Lock செய்ய உதவும்.
முக்கியமாக, உங்களது Device Internet உடன் Connect செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இந்த Service செயல்படும்.
உங்கள் Samsung மொபைலை கண்காணிக்க Samsung நிறுவனம் வழங்கும் Find My Mobile locator அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எப்படி பயன்படுத்துவது?
உங்கள் Samsung மொபைலில் முதலில் FindMyMobile.Samsung.com என்ற Website-க்கு சென்று Find My Mobile ஆப்ஷனில் உங்களது Account-ஐ Setup செய்ய வேண்டும்.
மேலும் Account Set செய்து இந்த Service-ஐ பெற நிறுவனம் கொடுத்திருக்கும் அனைத்து விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும்.
இந்த Account Setup process-ன் போது உங்களது Email Address, Mobile Number மற்றும் உங்கள் Samsung account password போன்ற அடிப்படை தகவல்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Website ஆனது கேட்கும்.
கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்து நீங்கள் Locked in செய்ததும், ஏற்கனவே Samsung Account-ல் signed in செய்யப்பட்டுள்ள உங்கள் Device-ன் இருப்பிடத்தை இந்த Tracker அம்சம் தானாகவே கண்டறியும்.
மேலும் வீட்டிலேயே உங்கள் மொபைலை எங்கேயாவது மறந்து வைத்துவிட்டீர்கள் என்றால் “Ring” பட்டனை Select செய்யலாம். இதனால் உடனடியாக உங்கள் Device Ring ஆகி ஒலியை உருவாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |