ஆபத்தான அந்த பெண்ணை கண்டுபிடிச்சாச்சு! இனி பிரச்சினை இல்லை: பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு
பிரித்தானியாவில் ஆபத்தான பிரேசில் வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக அடையாளம் காணப்படாமல் இந்த பெண்ணை கண்டுபிடித்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
. P 1 என அழைக்கப்படும் மிகவும் பரவக்கூடிய பிரேசிலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸால் பிரித்தானியால் மொத்தம் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அந்த 6 நபர்களில் ஒருவரை அடையாளம் காணமுடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதனால், அவர் தனிமைப்படுத்தப்படாததால் பலருக்கும் தொற்று பரவும் அபாயம் இருந்தது.
இதனால் அவர் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், கேள்விக்குரிய அந்த நபர் ஒருவழியாக கண்டுபிடிக்கப்பட்டதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் Matt Hancock வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அந்த நபர் தெற்கு லண்டனில் உள்ள Croydonல் இருப்பதாகவும், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
விசாரிக்கப்பட்டதில், இதுவரை அவர் தனது வீட்டிலிருந்து எந்த இடத்தும் பயணிக்கவில்லை என்றும் அவரிடமிருந்து இதுவரை யாருக்கும் வைரஸ் பயவியதற்கான அடையாளம் ஏதும் இல்லை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.