உங்கள் பழைய நண்பர்களை மிஸ் செய்றீங்களா? அவர்களை இணையதளம் மூலம் கண்டுபிடிப்பது எப்படி?
நண்பர்கள் வட்டாரம் என்பது எல்லோருக்கும் உண்டு என்றாலும், சிறந்த நண்பர்களாக அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இருக்க முடியும்.
பெரும்பாலும் அவர்கள் நம்முடன் இணைவது நமது பால்ய வயதில்தான். பிற்கால வாழ்க்கைப்போராட்டத்தில் அவர்களை நாம் தொலைத்திருக்கலாம். நீண்ட காலமாக அவர்களின் தொடர்பு முகவரி மற்றும் எண்கள் கிடைக்காமல் வருத்தப்படுவோர் நம்மில் பெரும்பாலானோர் உண்டு.
தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி பலவற்றை சாத்தியப்படுத்தி வரும் நிலையில், நம் நண்பர்களின் தற்போதைய நிலையை அறிய உதவும் இணையதளங்களை பற்றி காண்போம்.
Alumni.net
உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் இதில் உறுப்பினர் குழுக்களை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த இணையதளம் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுவதால், அதிகபட்ச தகவல்களை கொண்டுள்ளது. உங்கள் நண்பர்களை தேட வேண்டுமென்றால் முதலில் தளத்தில் நுழைந்தவுடன் உங்களுக்கென கணக்கொன்றை இலவசமாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பின்பு உலகம்-ஆசியா- நாட்டின் பெயர் என வரிசையாக தேர்வு செய்தபின் ஆங்கில அகர வரிசைப்படி இருக்கும் உங்கள் ஊரின் பெயரை தேர்வு செய்யவும்.
நீங்கள் தேர்வு செய்த ஊரில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களின் பெயர்களை அது காண்பிக்கும்போது உங்களுக்குரியதை தேர்ந்தெடுக்கவும். இதில் உங்கள் நண்பர் இருந்தால் இப்போது கண்டுபிடிக்கலாம்.
Facebook.com
நீங்களும் உங்கள் நண்பரும் படித்த பள்ளி, கல்லூரி, நிறுவனம் அல்லது உங்கள் மின்னஞ்சல் தொடர்புகளை பயன்படுத்தி ஃபேஸ்புக்கின் பல கோடி பயனர்களில் ஒருவராக உங்கள் நண்பர் இருந்தால் ஒரு சில வினாடிகளில் அவரை கண்டுபிடிக்கலாம்.
இதற்கு முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுன்ட்டில் உள் நுழையவும். அந்த பக்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் “Find Requests” என்பதை தெரிவு செய்தவுடன் திறக்கும் விண்டோவில் இருக்கும் “Find Friends” என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்ததாக திறக்கும் விண்டோவில் வலதுபுறத்தில் இருக்கும் முதல் வாய்ப்பான “Add Personal Contacts” மூலம் உங்கள் மின்னஞ்சல் உரையாடல்களை பயன்படுத்தியும், இரண்டாம் வாய்ப்பாக அதற்கு கீழ் உள்ள “Search for Friends” என்பதை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் நண்பரின் பள்ளி, கல்லூரி, அலுவலகம் சார்ந்த தகவல் அல்லது கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு விருப்பத்தேர்வை பயன்படுத்துவதன் மூலம் கண்டறிவதற்கான வாய்ப்புகள் பிரகாசம்!
Innfriend.com
ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த இணையதளத்தில் எளிமையாக கணக்கு துவங்கலாம். கணக்கொன்றை துவங்கியபின் தேவையான தகவல்களை நிரப்பி உங்கள் பக்கத்தை பக்காவாக வைத்திருப்பது நலம்.
மற்ற தளங்களை போன்று இதிலும் உங்களின் நண்பரை, கொடுக்கப்பட்டுள்ள சாதாரண தேடல் மற்றும் அட்வான்ஸ்ட் ஆப்ஷன்-ஐ பயன்படுத்தி கண்டறியலாம்.
உங்களின் நண்பர்கள் அவர்களின் முகவரியோ அல்லது ஏதாவது தொடர்பு தகவலை மாற்றினால் உங்களுக்கு தானாக ஒரு நோட்டிபிகேஷன் வந்துவிடும் என்பது இந்த தளத்தின் தனிச் சிறப்பு.