இந்த விடயத்திலுமா ஏமாற்றுவது? பணம் கொடுக்காமல் சென்ற நபருக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை
பாலியல் தொழிலாளி ஒருவரிடம் சென்றுவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய ஒருவருக்கு, அபராதமும் சிறைத்தண்டனையும் அளித்துள்ளது சுவிஸ் நீதிமன்றம் ஒன்று.
ஆனால், இந்த வழக்கில் முக்கியமான விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, பாலியல் தொழிலாளியிடம் செல்லும் ஒருவர் பணம் கொடுக்க மறுத்தால், அவர் வழக்கு தொடர முடியாது.
ஒரு பாலியல் தொழிலாளிக்கும் அவரது வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒழுக்கக்கேடானது என நீதித்துறை கருதுவதால், அது செல்லாது என்பதுதான் இன்றுவரை நடைமுறையிலிருக்கும் சட்டம்.
ஆனால், முதன்முறையாக, St. Gallen பெடரல் நிர்வாக நீதிமன்றம், வித்தியாசமான ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. அது பணம் கொடுக்காமல் ஏமாற்றிய அந்த நபருக்கு 300 சுவிஸ் ப்ராங்குகள் அபராதம் விதித்துள்ளதோடு, 50 நாட்கள் சிறைத்தண்டனையும் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை குறிப்பிடத்தக்க ஒரு மாற்றமாக பார்க்கும் பாலியல் தொழிலாளிகள், நீதித்துறை தங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஒரு நடவடிக்கையாக அதை பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.