Sledging செய்த கோஹ்லிக்கு அபராதம்! சம்பவம் செய்த பும்ரா..அனல் பறக்கும் பாக்சிங் டே டெஸ்ட்
அவுஸ்திரேலிய வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோஹ்லி
மெல்போர்னில் நடந்து வரும் டெஸ்டில் அவுஸ்திரேலிய இளம் வீரர் சான் கொன்ஸ்டாஸ் உடன் விராட் கோஹ்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் கோஹ்லியை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், விராட் கோஹ்லிக்கு போட்டியின் மொத்த ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பும்ரா அபாரம்
மறுபுறம் அவுஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 311 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சாம் கொன்ஸ்டாஸ் 60 ஓட்டங்களும், கவாஜா 57 ஓட்டங்களும், லாபுஷேன் 72 ஓட்டங்களும் எடுத்தனர். ஸ்டீவன் ஸ்மித் 68 ஓட்டங்களுடனும், பேட் கம்மின்ஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணிக்கு அச்சுறுத்தல் வீரராக இருந்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டை 0 ரன்னில் பும்ரா வெளியேற்றினார்.
பும்ரா வீசிய பந்தை அடிக்காமல் ஹெட் விட்டபோது அது ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் ஏமாற்றத்துடன் ஹெட் வெளியேறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |