பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் இல்லன்னு.., வழக்கு தொடர்ந்தவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா?
பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்கவில்லை என்று நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தவருக்கு என்ன நடந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
ஊறுகாய் இல்லை
தமிழக மாவட்டமான விழுப்புரம், வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர், அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார்.
இவர் கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்னதானம் வழங்குவதற்காக உணவகம் ஒன்றில் 25 பார்சல் சாப்பாட்டை வாங்கியுள்ளார். இதனை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் வாங்கியுள்ளார்.
அப்போது பார்சல் சாப்பாட்டின் விலை ரூ.80 எனவும், அதில் சாதம், சாம்பார், கார குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், வாழை இலை, கவர் மற்றும் 1 ரூபாய் ஊறுகாய் பொட்டலம் 25 பொட்டலம் ஆகியவற்றை கொடுப்பதாக கூறியுள்ளனர்.
பின்னர், உணவிற்கான ரூ.2000 -யை கொடுத்துவிட்டு ஆரோக்கியசாமி பார்சல் வாங்கியுள்ளார். அப்போது அவர்கள் உணவிற்கான ஒரிஜினல் பில்லை கொடுக்காமல் பேப்பரில் பில்லை கொடுத்துள்ளனர்.
அதனை வாங்கி சென்ற அவர், பார்சலில் ஊறுகாய் இல்லாததை கவனித்துள்ளார். இதன்பின்னர், ஹொட்டலுக்கு சென்று உரிமையாளரிடம் இதுபற்றி கேட்டுள்ளார்.
அப்போது ஊழியர்களை அழைத்து உரிமையாளர் கேட்ட போது தான் ஊறுகாய் வைக்காதது தெரியவந்துள்ளது.
ஹொட்டலுக்கு அபராதம்
பின்னர், ஊறுகாய்க்கான ரூ.25 -யை ஆரோக்கியசாமி கேட்டுள்ளார். ஆனால், அந்த தொகையை உரிமையாளர் கொடுப்பதற்கு மறுத்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு. இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.30 ஆயிரம், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம், ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25, ஒரிஜினல் ரசீது கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதாவது தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 % வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |