இது எங்கள் போர் அல்ல! பிரித்தானிய பிரதமருக்கு பாராட்டு..ட்ரம்பை புறக்கணித்து நாடொன்றின் ஜனாதிபதி
நேட்டோ நாடுகளைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பின் அழைப்பை பின்லாந்து மறுத்துள்ளது.
ட்ரம்ப் அழைப்பு
ஈரானுடனான போரில் மேலும் ஈடுபட மறுத்த நேட்டோ நாடுகள், ஹார்முஸ் நீரிணையை திறக்க உதவுமாறு டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்ததற்கும் மறுப்பு தெரிவித்தன.
குறிப்பாக, ஈரானியத் தாக்குதல்களில் இருந்து எண்ணெய் கப்பல்களைப் பாதுகாக்க பிரித்தானியா கப்பல்களை அனுப்பாது என்று கூறி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அவரது கோரிக்கையை புறக்கணித்தார்.
அதேபோல் உலகின் 20 சதவீத எண்ணெய் செல்லும் இந்த முக்கிய நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஈடுபட அவுஸ்திரேலியாவும் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமைதியாக இருக்கும் திறனைத் தாம் பாராட்டுவதாக பின்லாந்து ஜனாதிபதி அலெக்ஸ்சாண்டர் ஸ்டப் கூறியுள்ளார்.

பின்லாந்து ஜனாதிபதி மறுப்பு
மேலும் அவர், பின்லாந்து உட்பட நேட்டோ நட்பு நாடுகள் அமெரிக்காவுடன் சேர வேண்டுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அலெக்ஸ்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb) கூறுகையில்,
"இது ஒரு திடீர் தாக்குதல், அதனால் எங்களில் யாருக்கும் இதைப் பற்றித் தெரியாது. அதனால்தான் ஒருவேளை தயக்கமும், சிறிய எதிர்ப்பும் இருந்திருக்கலாம்". ரஷ்யாவுடன் 1,340 கி.மீ எல்லையைக் கொண்ட எங்கள் சொந்தப் பகுதியை நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். நிலைமையை மோசமாக்குவதை விட, இப்போது அதிக சமாதான மத்தியஸ்தத்தையே நான் காண விரும்புகிறேன் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அவரது இந்தக் கருத்துக்கள் ஜேர்மனியின் 'இது எங்கள் போர் அல்ல' என்ற கருத்துக்களை பிரதிபலிக்கிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |