56 பந்துகளில் முதல் டி20 சதம்! சிக்ஸர்களை பறக்கவிட்ட இளம் வீரர்
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் டி20 போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார்.
நியூசிலாந்து-ஸ்காட்லாந்து அணிகளுக்கு முதல் டி20 கிரேன்ஜ் கிரிக்கெட் கிளப்பில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாட்டம் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் ஃபின் ஆலன் அதிரடியில் மிரட்டினார்.
சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட அவர் 56 பந்துகளில் 101 ஓட்டங்கள் விளாசினார். 23 வயதாகும் ஆலனுக்கு இதுதான் முதல் டி20 சதம் ஆகும்.
10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 307 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
A maiden T20I hundred for Finn Allen in Edinburgh ?
— ICC (@ICC) July 27, 2022
Watch the #SCOvNZ T20I LIVE on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ? | ? Scorecard: https://t.co/n6L6sqHEOw pic.twitter.com/CSoY8LAhSu