16 சிக்ஸர்கள்! 62 பந்துகளில்137 ரன்கள்.. பாகிஸ்தானை சுக்குநூறாக்கிய இளம்வீரர்
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.
கான்வே 7 ஓட்டங்களில் அவுட் ஆக, செய்பெர்ட் அதிரடியாக 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், தொடக்க வீரரான பின் ஆலன் (Finn Allen) இரக்கமில்லாமல் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார்.
விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 48 பந்துகளில் சதம் அடித்தார். அதன் பின்னரும் வாணவேடிக்கை காட்டி 62 பந்துகளில்137 ஓட்டங்கள் குவித்தார். இதில் 16 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும்.
Successive half-centuries for Finn Allen. His 5th in T20 internationals comes from 26 balls. Follow play LIVE on TVNZ 1 and TVNZ+ #NZvPAK pic.twitter.com/xGUuO2ezg2
— BLACKCAPS (@BLACKCAPS) January 17, 2024
இதன்மூலம் நியூசிலாந்து அணி ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி ௧௭௯ ஓட்டங்கள் எடுத்ததால், நியூசிலாந்து அணி ௪௫ ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. 137 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் பின் ஆலன்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |