கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு- காவல்துறை தகவல்
FIR Registered Against TVK Kallakurichi MLA Arul Vignesh- கள்ளக்குறிச்சி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாகப் பெண் மாவட்ட ஆட்சியர் நேற்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆட்சியரிடம் இருந்து புகார் எதுவும் வரவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |