மைசூர் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து - அதிர்ச்சி வீடியோ!
மைசூரில் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து
கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் உள்ள தொழில் பூங்காவில் மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஏராளமான தொழிலாளர்களும், பொதுமக்களும் விபத்தில் சிக்கியுள்ளனர். அப்பகுதி முழுவதும் சுமார் 2 கி.மீ தொலைவிற்கு புகை சூழ்ந்துள்ளது.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசாரும், தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வீடியோவில் குடோனில் பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறுகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Fire accident at cracker warehouse in Hebbal Industrial area, #Mysuru. As Now no info on casualties.. More than 10 fire tenders rushed to spot. #karnataka #mysore pic.twitter.com/X3Cffjv1nP
— Senthil Nathan A (@senthu_ap) April 19, 2023