ஆங்கில கால்வாயில் பயணித்த படகில் தீ விபத்து: விரைந்த பிரித்தானிய உயிர்காக்கும் படகுகள்
பிரித்தானியாவின் ஆங்கில கால்வாயை பயணிகள் படகு ஒன்று கடந்து கொண்டு இருக்கும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
படகில் பற்றிய தீ
டோவரில் இருந்து கலேஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ஐல் ஆஃப் இன்னிஸ்ஃப்ரீ (Isle of Innisfree) என்ற படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
படகு கால்வாயின் பாதி தூரத்தில் இருந்த போது இன்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
The Isle of Innisfree/Sky News
இந்த சம்பவத்தின் போது படகில் 94 பயணிகள் மற்றும் 89 பணியாளர்கள் என மொத்தம் 183 பேர் இருந்தனர், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
விரைந்த மீட்பு படகுகள்
ஆங்கில கால்வாயின் பாதி வழியில் தீ விபத்து ஏற்பட்டு நின்ற படகை நோக்கி மூன்று உயிர்காக்கும் படகுகள் கென்டிலிருந்து அனுப்பப்பட்டன.
மேலும் சம்பவ இடத்திற்கு பிரான்ஸ் இழுவை படகு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Pic: MarineTraffic
விபத்து குறித்து ஐரிஷ் ஃபெரிஸின் செய்தித் தொடர்பாளர் வழங்கிய தகவலில், கடலில் நடக்கும் சம்பவங்களைச் சமாளிப்பதற்கு ஐரிஷ் படகுக் குழுக்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கின்றன, மேலும் நிறுவனம் அதன் பயிற்சியை செயல்படுத்தி படகில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளது.
மேலும் படகு நங்கூரத்தில் பாதுகாப்பாக உள்ளது, நிலைமை சீராக இருப்பதால் அவசர உதவிகள் எதுவும் தேவைப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.