பிரதமர் ஸ்டார்மரின் வீட்டில் அதிர்ச்சி சம்பவம் - பொலிஸ் விசாரணை ஆரம்பம்
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
லண்டன் வடக்கு பகுதியில் உள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சொந்தமான வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கண்ட சம்பவம் பற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட அவசர சேவைகளை பிரதமர் ஸ்டார்மர் நன்றி தெரிவிக்கின்றார். இது ஒரு உயிரின் பாதுகாப்பு தொடர்பான விசாரணையாக இருப்பதால் மேலதிகமாக எதுவும் தெரிவிக்க முடியாது” எனக் கூறப்பட்டுள்ளது.
பொலிஸார் விடுத்த செய்திக்குறிப்பில், ஞாயிறு அதிகாலை 1:35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
வீட்டின் நுழைவாயில் பகுதிக்கு சேதம் ஏற்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் இல்லையெனவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
லண்டன் ஃபயர் பிரிகேட் தீ விபத்து குறித்த செய்தியில், "சிறிய அளவிலான தீ" எனக் குறிப்பிட்டுள்ளது. தற்போது அந்த வீட்டு அருகிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |