ஐபிஎல் வீரர்கள் தங்கியிருந்த அறையில் தீ விபத்து - வீரர்களின் நிலை என்ன?
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள Park Hyatt ஹோட்டலின் முதல் மாடியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
ஹோட்டலில் தீ விபத்து
இந்த ஹோட்டலில் தான் SRH அணி வீரர்கள் தங்கியிருந்தனர். தீ விபத்தால் அந்த பகுதியில் கரும் புகை பரவ தொடங்கியது.
இதனையடுத்து உடனடியாக ஹோட்டல் நிர்வாகம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர், உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கு தங்கியிருந்த வீரர்கள், பாதுகாப்பாக அங்கிருந்தது அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கு யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தற்போது வரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |