சுவிஸ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்தில் தீவிபத்து
A fire broke out on Monday evening at the Federal Asylum Centre in the Swiss city of Zurich: சூரிக்கிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்தில் நேற்று மாலை தீவிபத்தொன்று நிகழ்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில், புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்று உள்ளது. அது ஃபெடரல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மையம் ஆகும்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்தில் தீ
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில், அந்த மையத்தில் தீப்பற்றியுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை Blick பத்திரிகை தெரிவித்துள்ளது.

உடனடியாக தீயணைப்பு வீரர்களும், ஆம்புலன்ஸ்களுடன் அவசர உதவிக்குழுவினரும், பொலிசாரும் அங்கு விரைந்த நிலையில் சீக்கிரமாகவே தீ அணைக்கப்பட்டுவிட்டதாக சுவிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த தீவிபத்தின்போது, புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சூரிக் குடிமைப் பாதுகாப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.