ஜெய்ப்பூர் சாலையில் பயங்கர தீ விபத்து: லொறி மோதல் காரணமாக 11 பேர் பலி
ஜெய்ப்பூர் சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
லொறி மோதி விபத்து
ஜெய்ப்பூரில் உள்ள அஜ்மீர் சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காலை 5:30 மணி அளவில் லொறி ஒன்று மற்ற வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.
அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பெரும் வெடிப்பின் போது பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் தீப்பிடித்து, சுற்றியுள்ள வாகனங்களை தீயில் எரித்தது.
வெடிப்பின் தாக்கம் மிகப்பெரியதாக இருந்ததுடன், எரிபொருள் தொட்டிகள் வெடித்ததால் தொடர் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
300 மீட்டர் சுற்றளவில் இருந்த வாகனங்கள் தீயில் முற்றிலுமாக கருகின.
வெடிப்பு 10 கிலோமீட்டர் தொலைவில் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருப்பு புகை பல கிலோமீட்டர் தொலைவில் தெரியும் அளவுக்கு வானில் புகை மூட்டம் எழுந்ததாக கூறப்படுகிறது.
தீயை அணைத்து காயமடைந்தவர்களை மீட்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறைந்தது 28 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
முதலில் மோதிய லாரியில் ஆபத்தான ரசாயனம் இருந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |