அவுஸ்திரேலியா நகரமொன்றில் உச்சம் தொட்ட வெப்பநிலை... பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவில் வெப்ப அலை கடுமையாகியுள்ள நிலையில், அதிகாரிகளிடமிருந்து பல பாதுகாப்பு எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளது.
வெப்ப அலை தொடர்பில் எச்சரிக்கை
பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் எனவும், மிக அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், எதிர்வரும் நாட்களில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மக்கள் வெப்ப அலை தொடர்பில் எச்சரிக்கை தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Picture: NCA NewsWire
அத்துடன் அதிக நீர் பருக வேண்டும் எனவும், தேவையான ஓய்வெடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் போதை மருந்து பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செப்டம்பர் மாதம் 20 வயது கடந்த இளைஞர்கள் இருவர் அதிக போதை மருந்து பயன்பாட்டால், இசை நிகழ்ச்சி ஒன்றின் போது மரணமடைந்துள்ள விவகாரத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.
வெப்ப அலை வீசும் காலத்தில் போதை மருந்து பயன்பாடு, உயிருக்கு ஆபத்தாக முடியும் எனவும் எச்சரித்துள்ளனர். மேலும், வெப்பம் அதிகரித்துள்ள நாட்களில் போதை மருந்து பயன்பாடு என்பது ரத்தம் உறைதல் உள்ளிட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும் எனவும், இதனால் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வெப்பமான நாளாக இருக்கலாம்
வார இறுதி நாட்களில் வெப்ப அலை சில பகுதிகளில் அதிகரித்து 60C என்பது போன்று உணரப்பட்டலாம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக சிட்னி நகரில் வெப்பநிலை உச்சம் தொட வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர்.
Picture: NCA NewsWire
மேலும், நான்கு ஆண்டுகளாக துறைமுக நகரத்தில் சனிக்கிழமை வெப்பமான நாளாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சிட்னி நகர வானிலை மையம் தெரிவிக்கையில், நகரின் மேற்கில் குறைந்தபட்சம் 40C மற்றும் 44C வரை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நியூ சவுத் வேல்ஸ் புறநகர் தீயணைப்பு சேவை விடுத்துள்ள எச்சரிக்கையில், நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் சுமார் 71 புதர் மற்றும் புல் தீ எரிகிறது எனவும் இதில் 29 பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |