பிரான்ஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ... பிரித்தானியர்கள் உட்பட ஏராளமானோர் வெளியேற்றம்
பிரான்சிலுள்ள பனிச்சறுக்கு மையம் ஒன்றில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் தீப்பற்றிய நிலையில், 400க்கும் அதிகமானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ...
பிரான்சிலுள்ள Savoie என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றிலுள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு திடீரென தீப்பற்றியுள்ளது.
தீ வேகமாகப் பரவ, அங்கு தங்கியிருந்த பிரித்தானியர்கள் உட்பட சுமார் 420 பேர் உடனடியாக ஹொட்டலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் நான்கு பேருக்கும் மட்டும் புகையை சுவாசித்ததால் பாதிப்பு ஏற்பட, அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள், 46 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்க, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |