நடுவானில் திடீரென பிரான்ஸ் பயணிகள் விமானத்தில் நடந்த சம்பவம்! உயிர் பயத்தில் உறைந்த பயணிகள்
சீனாவிலிருந்து புறப்பட்ட பிரான்ஸ் பயணிகள் விமானத்தில் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து சீன ஊடகமான Global Times அளித்த தகவலின் படி, சனிக்கிழமை அதிகாலை ஏர் பிரான்ஸ் AF393 பயணிகள் விமானம் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாரிஸிக்கு புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில சிறிது நேரத்தில் பின் பகுதியில் வெடி சத்தம் கேட்டுள்ளது, இதைத்தொடர்ந்து தீ பற்றி கரும்புகை வந்துள்ளது.
விமானத்திற்குள் தீ ஏற்பட்டத்தை கண்டு பயணிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
இதனையடுத்து, உடனே பெய்ஜிங் விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விமானம் அவசரமாக பெய்ஜிங் விமான நிலையத்திலே தரையிறக்கப்பட்டுள்ளது.
A cabin fire on Air France flight AF393, which was scheduled to take off from Beijing to Paris on Sat morning, sent the plane back to the Beijing Capital International Airport, Beijing Daily reported. No injuries have been reported and the airline has not revealed detailed info. pic.twitter.com/nfnBDprgyj
— Global Times (@globaltimesnews) September 18, 2021
இந்த சம்பவத்தில் பயணிகள் உட்பட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என Global Times குறிப்பிட்டுள்ளது.
எனினும், சம்பவம் தொடர்பில் ஏர் பிரான்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.