சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்தால் சுவிட்சர்லாந்தில் அதிகம் விற்பனையாகும் ஒரு பொருள்
சுவிட்சர்லாந்திலுள்ள மதுபான விடுதி ஒன்றில் நிகழ்ந்த தீவிபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அந்த துயர சம்பவம் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அதிகம் விற்பனையாகும் ஒரு பொருள்
சுவிஸ் மதுபான விடுதியில் நிகழ்ந்த தீவிபத்து உருவாக்கியுள்ள அச்சத்தால் மக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து சிந்திக்கத் துவங்கியுள்ளார்கள். இந்நிலையில், தீயணைப்புக் கருவிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக அவற்றை விற்கும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தீயணைப்புக் கருவிகள், தீயை அணைக்க பயன்படும் போர்வைகள் மற்றும் புகையைக் கண்டுபிடிக்க பயன்படும் கருவிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாம்.
தீயணைப்புக் கருவிகளின் விற்பனை பல நூறு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ள அதே நேரத்தில், தீவிபத்து தொடர்பில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என சுவிஸ் நாட்டவர்கள் இணையத்தில் விவாதிப்பதும் அதிகரித்துள்ளதாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |