மொத்த குடும்பமும் தீயில் கருகிய நிலையில் கண்ட தீயணைப்புத்துறை வீரர்: நடுங்க வைக்கும் சம்பவம்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மொத்த குடும்பத்தை தீவிபத்தில் இழந்துள்ளார் தீயணைப்புத்துறை வீரர் ஒருவர்.
பென்சில்வேனியா மாகாணத்தில் தீயணைப்புத்துறையில் பணியாற்றி வந்தவர் Harold Baker என்பவர். சம்பவத்தன்று குடியிருப்பொன்று தீ விபத்தில் சிக்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து அவரும் சக வீரர்களும் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதில் தீவிபத்தில் சிக்கிய குடியிருப்பு தமது குடும்பத்தினர் தங்கியிருந்தது என்பது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த இத்தீ விபத்தில் Harold Baker-ன் மகன் மற்றும் மகள், பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட மொத்த குடும்பமும் பலியாகியுள்ளது.

@WGAL
பேரப்பிள்ளைகள் மூவரும் கோடை காலம் என்பதால் குடியிருப்புக்கு திரும்பியதாகவும், அவர்கள் துரதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், மோப்ப நாயின் உதவியுடன் உடல்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியா மாகாணத்தின் Nescopeck பகுதியில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தூக்கத்தில் இருந்ததால் எவரும் தப்பிக்க முடியாமல் போயுள்ளது.
மட்டுமின்றி, தீயணைப்பு வீரர்களால் குடியிருப்பின் உள்ளே நுழையவும் முடியாமல் போயுள்ளது. நடந்த சம்பவத்திற்கு மாகாண ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

@Luzerne County fire companies
 
                 
                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        