பிரித்தானியாவின் டவர்-பிளாக் கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து: பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!
பிரித்தானியாவின் தென்கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள 17 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ப்ரோம்லி (Bromley) நகரத்தின் செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் உள்ள 17 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 15 வது தளத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்து அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து சமூக ஊடங்களில் வெளியாகியுள்ள காட்சிகளில், அடுக்குமாடி குடியிருப்பின் சாய்ந்த கூரையின் பகுதியில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் கரும்புகை வெளியேறுவதை காட்டுகிறது.
Oh dear major incident in Bromley. Brave fireman trying to put down the fire. Hope everyone has got out safety pic.twitter.com/oTlu45cMpm
— Patrick Heisel OBE (@PHeiselOBE) July 3, 2022
இந்த விபத்தில் தீபிழம்புகள் மிகப் பயங்கரமாக அதிகரித்த நிலையில், தீயிணை அணைக்க Bromley, Beckenham, Addington, Woodside, Lewisham, Forest Hill, Sidcup மற்றும் Croydon மற்றும் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 64மீட்டர் டர்ன்டேபிள் ஏணியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுத் தொடர்பாக அந்தபகுதியின் ஸ்டேஷன் கமாண்டர் கொலின் டிக்பி தெரிவித்த தகவலில், தீயணைப்பு குழுக்கள் சீரான முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் எனவும் இது நீண்ட நேரம் போராட்டமாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய எல்லையில்...நோட்டோ இராணுவ தளம்: அதிகரிக்கும் பதற்றம்!
தென்கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழப்புகள் மற்றும் படுகாயம் எதுவும் ஏற்பட்டு உள்ளதா என்ற தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.