சுவிஸ் மாகாணம் ஒன்றில் தொடர்ச்சியாக பல இடங்களில் தீ: தீயணைப்பு வீரர் கைதானதால் அதிர்ச்சி
சுவிஸ் மாகாணம் ஒன்றில் பல இடங்களில் தீப்பற்றிய நிலையில், அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால், கைது செய்யப்பட்டவர் ஒரு தீயணைப்புத் துறை வீரர் என்பதுதான்!
சுவிட்சர்லாந்திலுள்ள Solothurn பகுதியில், பல இடங்களில் தொடர்ச்சியாக தீப்பற்றியுள்ளது. பொலிசார் அது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, 33 வயது நபர் ஒருவர் சிக்கினார்.
அம்மாகாணத்தில் 13 இடங்களில் தீப்பற்றியுள்ள நிலையில், சிக்கியவர் தீயணைப்புத்துறையில் வேலை செய்பவர் என்பது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், அந்த நபர் வாழும் இடத்திற்கு அருகில் பல இடங்களில் தீப்பற்றியுள்ளதும் அவருக்கும் தீப்பற்றிய கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கும் தொடர்பும் உள்ளதும் தெரியவந்துள்ளது.
அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் அடைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Image - worldradio.ch