சுவிஸ் தேசிய தினத்தன்று இதற்கு தடை! இரு முக்கிய நகரங்கள் உத்தரவு
ஐரோப்பாவில் தொடர்ந்து அதிக வெப்பநிலை மற்றும் வறட்சியின் விளைவாக ஆகஸ்ட் 1-ஆம் திகதி சுவிஸ் தேசிய தினத்தை முன்னிட்டு வானவேடிக்கைகளை தடை செய்ய சுவிஸ் நகரங்கள் உத்தரவிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் மேற்கில் உள்ள நியூசெட்டல் மற்றும் ஃப்ரிபோர்க் ஆகிய நகரங்கள், ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய திகதிகளில், பட்டாசுகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளன. மாறாக அதிகாரப்பூர்வ வல்லுநர்களால் காட்சிப்படுத்தப்படும் வாணவேடிக்கைகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் உள்ள பல மண்டலங்கள் ஏற்கனவே பட்டாசுகளுக்கு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆர்காவ் பக்தியில் காடுகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்த வெளியில் தீமூட்டுவதற்கும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, வாட் மற்றும் ஃப்ரிபோர்க் மண்டலங்கள் அனைத்தையும் தடை செய்தன. இருப்பினும், வீட்டு தோட்டத்தில் அல்லது மொட்டை மாடிகளில் பார்பிக்யூக்கள் தடை செய்யப்படவில்லை.
சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 1-ஆம் திகதி, சுவிஸ் கூட்டமைப்பின் வேர்களைக் குறிக்கும் தேசிய தினத்திற்கான பொது விடுமுறை தினமான சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய நடவடிக்கைகளாக வெளியில் தீ மூட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடப்படும்.
சுவிஸில் குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெப்பநிலை அதிகமாக இருந்தது, தெற்கில் உள்ள பயாஸ்காவில் 36 டிகிரியை எட்டியது. பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் வெப்பம் 35.4 டிகிரியை எட்டியது.