2-வது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற முதல் IFS அதிகாரி
இரண்டாவது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற முதல் IFS அதிகாரி இவர் தான்.
இன்று 100 சதவீத பார்வையற்ற இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான பெனோ ஜெஃபினின் பயணத்தைப் பற்றி பார்க்கலாம்.
யார் அவர்?
தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் பெனோ ஜெஃபின். இவரது தந்தை ஒரு ரயில்வே ஊழியராகவும், தாயார் இல்லத்தரசியாகவும் உள்ளார். பெனோ ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) ஒரு தகுதிகாண் அதிகாரியாகவும் பணியாற்றினார் பெனோ.
பள்ளி நாட்களிலிருந்தே, UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு (CSE) தயாராவதற்கு பெனோ உறுதியாக இருந்தார்.
இதற்காக, பிரெய்லி எழுத்துகளில் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்து தயாரிப்புகளைத் தொடங்கினார் பெனோ. அதோடு, இணையத்தில் தலைப்புகளைக் கேட்டு பாடங்களைக் கற்றுக்கொண்டு புரிந்துகொண்டார்.
இறுதியாக 2014 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் 343 வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார் பெனோ ஜெஃபின் .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |