புதுவருடம் பிறந்து தமிழ் சினிமாவில் முதல் மரணம்! மாரடைப்பால் இறந்த பிரபலம்.. அதிர்ச்சியடைந்த நடிகர், நடிகைகள் வெளியிட்டுள்ள பதிவுகள்
தமிழ்சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த கே.பாலு மாரடைப்பால் காலமானார்.
சின்னதம்பி, பாஞ்சாலங்குறிச்சி ,ஜானகிராமன் போன்ற 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு.
இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு திடீரென பாலுவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு பாலு வெற்றி பெற்றிருந்தார்.
பாலுவின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு பல உயிர்களை கொரோனா எடுத்து சென்ற நிலையில் தற்போது மீண்டும் திரையுலகை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகர் சரத்குமார் தனது டுவிட்டரில், பாலுவின் மரணம் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
Shocked & saddened by the sudden demise of #KBFilms #Balu today. He left too soon & created a void in film industry. May his soul rest in space. My deepest condolences to his family, friends & my colleagues from the industry.
— R Sarath Kumar (@realsarathkumar) January 2, 2021
நடிகை ராதிகாவின் பதிவில், ஆழ்ந்த இரங்கல்கள், பாலும் சீக்கிரமாக சென்றுவிட்டார் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
RIP, gone too soon. #KBfilms Balu https://t.co/fkZaWaOTuA
— Radikaa Sarathkumar (@realradikaa) January 2, 2021
நடிகர் மனோபாலாவின் டுவிட்டர் பதிவில், என் நண்பன் தயாரிப்பாளர் திரு.பாலு அவர்களின் மறைவு தாங்கவொண்ணா துயரத்தை கொடுக்கிறது..ஆழ்நத இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
என் நண்பன் தயாரிப்பாளர் திரு.பாலு அவர்களின் மறைவு தாங்கவொண்ணா துயரத்தை கொடுக்கிறது..ஆழ்நத இரங்கல்...
— Manobala (@manobalam) January 2, 2021