வரலாறு படைத்த ஒரே இங்கிலாந்து வீரர்., பென் ஸ்டோக்ஸ் சாதனை
பென் ஸ்டோக்ஸ் 10000 ஓட்டங்கள் குவித்து 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாறு படைத்தார்.
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இங்கிலாந்து அணிக்கு அவ்வளவாகக் கைகொடுக்கவில்லை. தொடர் தோல்விகளால் அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறினர். தற்போது இங்கிலாந்து அணி 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து அணிக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும், தனிப்பட்டமுறையில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு திருப்திகரமான தொடராக முடிகிறது என்று சொல்லலாம்.
ஏனெனில், இன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்துவரும் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வரலாறு படைத்தார். இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 108 ஓட்டங்கள் குவித்தார்.
ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு முன்பே 6 நிமிட தாமதத்தல் Timed-Out ஆன இந்திய வீரர்! 16 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்
10000 ஓட்டங்கள்., 100 விக்கெட்டுகள்
சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாறு படைத்தார் பென் ஸ்டோக்ஸ்.
ஸ்டோக்ஸ் இதுவரை 97 டெஸ்டில் விளையாடி 36.41 சராசரியில் 6,117 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதங்களும் 30 அரைசதங்களும் உள்ளன. அவர் 113 ஒருநாள் போட்டிகளில் 39.89 சராசரியில் 3,379 ஓட்டங்கள் எடுத்தார். இதில் நான்கு சதங்கள் மற்றும் 23 அரைசதங்கள் உள்ளன. அவர் 43 டி20 போட்டிகளில் 21.66 சராசரியில் 585 ஓட்டங்கள் எடுத்தார். அவர் மூன்று வடிவங்களிலும் மொத்தம் 10,081 ஓட்டங்களை எடுத்தார்.
200 விக்கெட்டுகளுக்கு மேல்
இங்கிலாந்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் 97 டெஸ்ட் போட்டிகளில் 197 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எட்டு முறை நான்கு விக்கெட்டுகளையும், நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியைத் தவிர, ஒருநாள் போட்டிகளில் 112 போட்டிகளில் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 43 டி20 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மூன்று வடிவங்களிலும் மொத்தம் 297 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
2023 ICC World Cup, England Cricket Team, Ben Stokes First England Player To Score 10000 Runs 100 Wickets, Ben Stokes, வரலாறு படைத்த பென் ஸ்டோக்ஸ்